×

மே.வங்க காங். தலைவர் சோமன் மித்ரா மறைவு: சோனியா உள்ளிட்டோர் இரங்கல்

கொல்கத்தா:  மேற்கு வங்க  மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இறந்தார். மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் சோமன் மித்ரா (78). வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். கடந்த 1960ம் ஆண்டுகளில் காங்கிரசில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக சோமன் மித்ரா திகழ்ந்தார்.

1992-1996, 1996-1998ம் ஆண்டுகளிலும், 2018ம் ஆண்டு செப்டம்பரில் இருந்தும் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக இருந்தார். மேலும், சீல்டா சட்டப்பேரவை தொகுதியில் 7 முறை எம்எல்ஏ.வாக இருந்துள்ளார். 2008ம் ஆண்டு காங்கிரசில் இருந்து சோமன் மித்ரா பிரிந்து சென்றார். 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங். சார்பில் டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ம் ஆண்டு மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இவருடைய மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Soman Mitra ,Sonia ,death , May.Cong Cong. Leader Soman Mitra, Deceased, Sonia, Funeral
× RELATED காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு